gowtham karthi forgiveness tal

மதுரை விஷால் டி மாலில் இவன் தந்திரன் திரைபடதின் விளம்பர நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் நடிகர் கெளதம் கார்த்திக், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கெளதம் கார்த்திக், ரஜினி அரசியலில் நுழைவது பற்றி நான் கூறிய கருத்து தவறாக வந்துள்ளது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் நான் ரஜினிகாந்தை நடிகராகக் தான் பார்க்கிறேன் என்றும் நான் கூறிய கருத்துக்கு தவறாக நினைக்கும் பட்சத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.

மேலும் எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் அரசியலுக்கு வர விருப்பமில்லை எனது அப்பா அரசியலுக்கு வந்ததிலேயே எனக்கு விருப்பமில்லை என கூறினார்

அடுத்ததாக தான் 'ஹர ஹர மகாதேவகி' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன் என்றும் இனி என்னுடைய அனைத்து படங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கெளதம் கார்த்தி தெரிவித்தார்.