Jacquline vs Rayan : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கோவா கேங் என சுற்றிவந்த ஜெஃப்ரி, செளந்தர்யா, ஜாக்குலின் மற்றும் ரயான் ஆகியோர் சண்டைபோட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவு பிரெண்ட்ஷிப்பும் இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த பிரெண்ட்ஷிப் கேமுக்கு இடையூறாகவும் இருக்கும். இதுவரை நடந்த சீசன்களில் மூன்றாவது சீசனில் தான் பிரெண்ட்ஷிப் கேமுக்கு தடையாக இல்லாமல் இருந்தது. அந்த சீசனில் கவின், சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், முகென் ஆகியோர் நட்புடன் இருந்தாலும் டாஸ்க்கின் போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டிபோட்டு விளையாடினர்.
அதை காப்பியடிக்க நினைத்து அடுத்தடுத்த சீசன்களில் இருந்த பிரெண்ட்ஷிப் கேங் எல்லாம் பல்பு தான் வாங்கியது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது தான் தற்போது பிக் பாஸ் 8-வது சீசனில் உள்ள கோவா கேங். ஜாக்குலின் செளந்தர்யா, ரயான், ஜெஃப்ரி ஆகியோர் கோவா கேங் என ஒரு குழுவை அமைத்து அதற்கென தனி ரூல்ஸை போட்டு, மற்றவர்களின் விளையாட்டை பாதிக்கும் வகையில் ஆடியதால் சில வாரங்களுக்கு முன் விஜய் சேதுபதி அவர்களை எச்சரித்தார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வீட்டில் விபத்து; வலியால் துடித்த போட்டியாளர் - அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி
குறிப்பாக ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்கில் இந்த கோவா கேங் ஆட்டத்தையே ஸ்பாயில் பண்ணிவிட்டனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, அவர்களுக்கு வார்னிங் கொடுத்தார். அவர் எச்சரித்த மறுதினமே அந்த கோவா கேங்கில் இருந்து கழண்டுகொண்ட ஜெஃப்ரி தனியாக கேம் ஆட ஆரம்பிடித்துவிட்டார். இந்த வாரம் அந்த கேங்கில் எஞ்சியிருந்த செளந்தர்யா, ஜாக்குலின் மற்றும் ரயான் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு அவர்களும் பிரிந்துவிட்டனர்.
செளந்தர்யா இந்த வாரம் ஜாக்குலினை நாமினேட் செய்ததால் ஜாக்குலின் அவருடன் சண்டை போட்டார். அதேபோல் இன்று கிச்சனில் சக்கரை எடுத்து சாப்பிட்ட விவகாரத்தில் ரயான் - ஜாக்குலின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் நல்ல இருந்த கேங்கை ஒரே வாரத்தில் இப்படி செதச்சுட்டீங்களே டா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலம் இந்த சீசனில் ஜாலியாக இருந்த கோவா கேங்கின் சோலியை முடித்துவிட்டார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கதறும் பெற்றோர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணவ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா?
