Asianet News TamilAsianet News Tamil

Gentleman 2 : 30 வருடங்களுக்கு பின் உருவாகும் 'ஜென்டில்மேன் II'.. இன்று முதல் துவங்கியது படப்பிடிப்பு..!

30 வருடத்திற்கு பின் 'ஜென்டில்மேன் 2' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் துவங்கியுள்ளது.
 

Gentleman 2 movie shooting started today mma
Author
First Published Oct 9, 2023, 5:57 PM IST

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு, ஆக்ஷன் மிங் அர்ஜுன் மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் - டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'ஜென்டில்மேன்'.  இந்த படத்தை தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து, இப்படத்தின் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

முதல் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் தொடந்து நடந்து வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு, இன்று முதல் சென்னையில் துவங்கியுள்ளதாக படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Gentleman 2 movie shooting started today mma

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.
இதனை தமிழக  தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து  ஆக்‌ஷன் சொல்ல.. படபிடிப்பு ஆரம்பமானது. 

Gentleman 2 movie shooting started today mma

உன் நினைவில் மூழ்கி இறந்து போகிறேன்! மறைந்த மகள் மீரா குறித்து பாத்திமா விஜய் ஆண்டனியின் கண்ணீர் பதிவு!

முதல் காட்சியில், நாயகன் சேத்தன்,  நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. படம் குறித்து, மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கூறுகையில்... "எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ஜெண்டில்மேன்-ll படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார். சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios