Gentleman 2: ஜென்டில்மேன் 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

'ஜென்டில்மேன் 2' படத்தின், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
 

Gentleman 2 movie motion poster released

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன் - மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் - டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'ஜென்டில்மேன்'.  இந்த படத்தை தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தார். முதல் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார்.

Gentleman 2 movie motion poster released

Biggboss Season 7: 'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கயல் சீரியல் நடிகை! யார் தெரியுமா..?

ஜென்டில்மேன் 2 படத்தின், படப்பிடிப்பு பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் இசை கோர்ப்பு பணிகளையும் சமீபத்தில் இசையமைப்பாளர் கீரவாணி மேற்கொண்டது பற்றிய தகவல்கள் வெளியானது. RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இந்த படத்திற்கு இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Gentleman 2 movie motion poster released

பாக்கியாவை மிரட்டி பார்க்கும் இனியா! ஈஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்? 'பாக்கியலட்சுமி' சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

முதல் பாகத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார். முதல் பாகம் விட இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறார். இப்படம் குறித்து அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios