'ஜென்டில்மேன் 2' கதையை கேட்ட கீரவாணி! அடுத்த மாதம் தொடங்கும் இசை பணிகள்! லேட்டஸ்ட் அப்டேட்!

'ஜென்டில்மேன் 2' படத்திற்கு கீரவாணி இசையமைக்க உள்ள தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்த மாதம் முதல் இதற்கான பணிகளை கீரவாணி துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

gentleman 2 movie latest update released

கடந்த 1993 ஆம் ஆண்டு, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் - மதுபாலா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜென்டில்மேன்' இப்படம், வெளியாகி சுமார் 30 ஆண்டுகள் கழித்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர்  K.T.குஞ்சுமோன் அறிவித்தார். முதல் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை  ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தை  K.T.குஞ்சுமோன் மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்.

அதே போல், முதல் பாகத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில்... இரண்டாம் பாகத்திற்கு, 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருதை வாங்கிய எம்.எம்.ராஜமௌலி இசையமைக்க உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் இசை பணிகளை கீரவாணி துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

gentleman 2 movie latest update released

ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு 400 கோடி பணம்... 24 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதா? ராணா கூறிய தகவல்!

இதுகுறித்து படக்குழு தரப்பில் வெளியாகியுள்ள தகவலில், தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன்.  சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் பிரமாண்ட திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

S.S.ராஜ்மௌலியின் RRR படத்தின் 'நாட்டு நாட்டு.. ' பாடலுக்காக 'பெஸ்ட் ஒரிஜினல் சாங்' ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் M.M.கீரவாணி, "ஜென்டில் மேன்-2" படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

gentleman 2 movie latest update released

இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் டைரக்டர் A.கோகுல் கிருஷ்ணா ஐதராபாத்திற்கு சென்று முழு கதையையும் கீரவாணிக்கு நேற்று சொல்லி முடித்தார். கதை பிரமாண்டமாக இருக்கிறது.. அடுத்த மாதமே கம்போசிங் ஆரம்பித்து விடலாம் என்று ஜென்டில் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனிடன் கீரவாணி சொல்லி உள்ளதாகவும், . இதை பிரமாண்டமாக தயாரிக்க போகிறேன் என்று கீரவாணியிடம் குஞ்சுமோன் சொல்ல, சூப்பர்.. வாழ்த்துக்கள் சார் என்றார் கீரவாணி சொன்னதாக கூறப்படுகிறது. மேலும்  அதற்கான வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறார், K.T.குஞ்சுமோன்.

Ilayaraja Birthday: குடும்பத்தோடு இளையராஜா கேக் வெட்டி கொண்டாடிய 80-வது பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!

இந்த படத்தில், ஹீரோயினாக நயன்தாரா என்கிற புதுமுக நடிகை நடிக்க உள்ள நிலையில், கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே கருங்காலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios