சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, கதாநாயகிகளாக சில நடிகைகள் தற்போது கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், இயக்குனர் திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. மிகவும் மங்களகரமான கதாப்பாத்திரத்தில் மகாவாக நடித்த இவர் முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இந்த தொடரை அடுத்து, இவருக்கு எந்த சீரியலிலும் அழுத்தமான காதாப்பாத்திரம் கிடைக்கவில்லை. சில சீரியல்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில் கமிட் ஆனார். 

இந்த சீரியலில் இருந்து கீதாஞ்சலி , தற்போது திடீர் என வெளியேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறியது குறித்து கூறுகையில்.  . ஷூட்டிங் தேதிகள்ல பிரச்னையானதாலதான் வெளியேறி உள்ளதாகவும். ஏற்கனவே இரண்டு சீரியல்களில் நடிப்பதால்  பிரச்னைகள் வரும்கிறது தெரிஞ்சுதான், ஆரம்பத்துல தெளிவா பேசிட்டு கமிட் ஆனதாகவும். ஆனா திடீர்னு, 'நிறம் மாறாத பூக்கள்' தொடருக்கு தேதிகள் கேட்கிறப்ப, என்னை அனுமதிக்கலை. கேட்டா வாக்குவாதமே மிஞ்சியது. இதனால் வெளியேறிடறது நல்லது என்பது புரிந்து கொண்டு தான் வெளியேறி விட்டதாகவும் கூறியுள்ளார்.