பிக் பாஸ் நிகழ்ச்சியில், அனைத்து போட்டியாளர்களாலும் எதிரியாக பார்க்கப்படுபவர் நடிகை ஓவியாதான். ஆனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இவருக்கு தான் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில நாட்கள் ஓவியாவுடன் கட்டி பிடித்து பழகி வந்த காயத்ரி மீண்டும் தன்னுடைய சுய ரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார். 

மேலும் இவர் சினேகனிடம் வந்து கடந்த ஐந்து வாரமாக ஓவியா எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் இந்த வாரம் அவர் வேலை செய்ய வேண்டும். அவர் எந்த வேலையும் செய்யவில்லை என்றால் நானும் செய்யமாட்டேன் என கூறினார்.

அதே போல இந்த வாரம் முழுவதும் ஓவியா சமைத்து கொடுத்தால் மட்டும் தான் நான் சாப்பிடுவேன்... அவர் சப்பாத்தியை அப்பளம் போல் சுட்டு கொடுத்தாலும் நான் சாப்பிட தயார் என கூறியுள்ளார்.