gayatri scoping for kamalhassan
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமலஹாசன். நடன இயக்குனர் காயத்ரியை தொடர்ந்து மூன்று வாரங்களாக ஏன் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என கூறி கேவலப்படுத்தி வருவது அனைவரும் அறிந்தது தான்.
இந்த கேள்விக்கு கமல்ஹாசனுக்கு முன்னாள் பதில் கூற தைரியம் இல்லாத காயத்ரி, அனைவரிடமும் நான் இருப்பது ஆணாதிக்கம் அதிகம் உள்ள துறை, அவர்களிடம் வாங்க சார் போக சார் எல்லாம் பேச முடியாது. இப்படித்தான் பேச வேண்டும் என நேற்று கூட தன் பக்கம் உள்ள நியாயத்தை ஆரவிடம் கூறினார்.
மேலும் ஏன் அசிங்கமாக பேசுகுறீர்கள் என திரும்பவும் கமல் கேட்டால், தன்னிடம் இப்படி தான் பதில் வரும் என கூறி ரஜினியை போல் நடித்து "கெட்ட வார்த்தை பேசுறவங்க எல்லாம் கெட்டவர்களும் அல்ல... நல்ல வார்த்தை பேசுறவங்க எல்லாம் நல்லவர்களும் இல்லை" என உலகநாயகனுக்கு எதிராக ஒரு பஞ்ச் பேசியுள்ளர் .
