பிக் பாஸ் நிகழ்ச்சியில், எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறி இருப்பது.

இத்தனை நாட்கள், போட்டியாளர்களிடம் மட்டுமே தன்னுடைய கோபத்தை காட்டி வந்த காயத்ரி தற்போது தொகுப்பாளர் கமலஹாசன் மீதும் கோபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், தன்னை தொடர்ந்து மூன்று  வாரங்களாக அசிங்க மான வார்த்தைகளை பேசுவதாக கமல் கூறி வருகிறார். அவர் வாயால் ஏன் எனக்கு இப்படி ஒரு வார்த்தையை கேட்க வேண்டும்.

என்னை சரி செய்யும் உரிமை என் அம்மாவிற்கு மட்டுமே உள்ளது என்று கூறி கமலை டார்கெட் செய்துள்ளார். இடையில் ரைசா தன்னையும் தான் கமல் இது போன்ற கேள்விகளை கேட்டார் என கூற, உங்களோடு என்னை ஒப்பிட வேண்டாம் என ரைசா மீதும் கோபத்தை காட்டினார். 

ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போது மனிதனை கடிக்கும் கதை போல் காயத்ரியின் நடவடிக்கை உள்ளது.