gayatri raguram crying speech
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி பொய் பேசியதாக கூறப்பட்டதை, தெளிவு படுத்தும் விதத்தில் உலக நாயகன் கமலஹாசன் சாக்லேட் பவுடர் வேண்டும் என காயத்ரி பிக் பாஸ் அறையில் பேசிய காட்சிகளை மீண்டும் அனைவர் மத்தியிலும் திரையிட்டு காண்பித்து ஏன் வெளியில் வந்து மாற்றி பேசினீர்கள் என காயத்ரியிடம் கேள்வியும் எழுப்பினார்.
இதற்கு காயத்ரி ரகுராம் தனக்கு "சீர்" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால் இப்படி நடந்து விட்டதாக கூறி விளக்கம் கொடுத்தார்.
ஆனால் தன்னை பலர் மத்தியிலும் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி அசிங்கப்படுத்தி விட்டது என்றும் தன்னை பற்றி தெரிந்த பல பிரபலங்கள் இருக்கின்றனர், இதனை என் அம்மா பார்த்தால் தன்னை பற்றி என்ன நினைப்பார் என சிந்தித்து கொண்டே திடீர் என அழ தொடங்கினார் காயத்ரி.
பின் அவருக்கு நடிகர் சக்தியும், சினேகனும் ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து பேசிய காயத்ரி தனக்கு இந்த நிகழ்ச்சியில் இருக்க பிடிக்க வில்லை என்று கூறி அழுதார்.
