gayathri warning julie in bigg boss
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. நேற்று உரசிக்கொண்டவர்கள் இன்று பட்டாசாக வெடிக்கிறார்கள். டி.ஆர்.பிக்காக செய்கிறார்களா? உண்மையாகவே அப்படி நடக்கிறார்களா எனபது பிக் பாஸுக்கே வெளிச்சம்.
இன்றைய நிகழ்ச்சியில் ஜூலியானைவை கட்டிபிடித்து கொஞ்சிக்கொண்டிருந்த காயத்ரி கடுமையாக மிரட்டும் காட்சி வெளியானது.
ஜூலி அழுதுகொண்டே தற்போது பிக் பாஸ் குடும்பத்திற்கு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம், இரண்டு நாட்களுக்கு முன் ஜூலியை அழைத்து நடிக்காதே, நடித்தால் இங்கு நிலைக்க முடியாது என கூறி செம டோஸ் விட்டதால் ஜூலி அழுதது வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர்களது சண்டை மேலும் காரசாரமாகியுள்ளது.
மீண்டும் ஜூலியை குறிவைத்து காயத்ரி ரகுராம் சண்டைக்கு இழுத்தபோது, டிஆர்பி க்காக உங்களை போல் என்னால் நடிக்க முடியாது என்று அழுத்தபடியே சத்தம் போட்டார் ஜூலி , அதற்கு ஜூலியை அடிப்பது போல் அவருக்கு நெருக்கமாக சென்ற காயத்ரி என் கிட்ட வச்சிக்காதே , வச்சிகிட்ட அவ்வளவுதான் என்று கடுமையாக எச்சரித்தார்.
இதனால் அழுதபடி இருந்த ஜூலி வேகமாக வந்து, கேமராவை பார்த்து நான் இப்போதே வீட்டிற்கு போக வேண்டும் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது என கூறி கதறி அழுதார்.
பின்னர் வேகமாக திரும்பி சென்றார். இதனால் ஜூலி தானாக கோபித்துக்கொண்டு வெளியே செல்வாரா? அல்லது பரபரப்பை கூட்டவா என்பதை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.
