அமித் ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிராக கமல் வெளியிட்ட ட்விட்டையும் வீடியோ பதிவையும் தமிழ் உணர்வாளர்கள் பலரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் நிலையில் முன்னாள் பிக்பாஸ் நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கிண்டலடித்துள்ளார். அவரது அப்பதிவுக்குக் கீழே நெட்டிசன்கள் அவரை கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய தினம் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் ’பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்ததால் உருவானதுதான் இந்தியா. ஆனால் அந்த ராஜாக்கள் தங்கள் மொழியையோ கலாச்சாரத்தையோ ஒருபோதும் விட்டுக்கொடுக்க முன்வந்ததில்லை’என்பதை இந்தி மொழியைத் திணிக்க விரும்பும் அமித் ஷாக்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று ஒரு காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல். அப்பதிவை சரியான நேரத்தில் சரியான பதிலடி என்று தமிழ் உணர்வாளர்கள் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் எப்போதும், தமிழர் என்கிற உணர்வை விட பாஜகவின் பக்தராகவே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில்,...
“இந்தியா என்பது  ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்” என்ற கமலின் பதிவுக்கு,... விருந்து சாப்பிட ஒரு வாழை இலை தேவை. அது இந்தி மொழியாக இருந்துவிட்டுப்போகட்டுமே’என்று தெனாவட்டாக கமலுக்கு பதில் அளித்திருந்தார்.

காயத்ரியின் அப்பதிவைக் கண்டு டென்சனான நெட்டிசன்கள்,...ஆம். வாழை இலை தேவைதான் விருந்து சாப்பிட. ஆனால் சாப்பிட்ட பின்பு வாழை இலையை குப்பையில் போடு விடுவோம்...இந்தியில டிவிட் போடாமா என்ன ....க்கு இங்கிலீஷ்ல போட்டு இருக்க அப்படினு அய்யா சாமி கேட்க சொன்னார் பதில் சொல்லுங்க அம்மணி... முன்னால் மாநில தலைவர் அக்கா இல்லாத இடத்த நிரப்ப முயற்சி பண்ணி இப்படி tweet பண்ணிட்டு இருக்கியா?!!!அந்த அளவுக்குலாம் உன்ன தூக்கி meme போட்டு பெரிய ஆள் ஆக்கிட மாட்டோம்....கிளம்பு கிளம்பு...பிக்பாஸ் ல இருந்து விரட்டி அடிச்சது எல்லாம் கண் முன்னாடி வந்து போகும் இல்லை யா??😂😂 என்று தாறுமாறாக கமெண்ட் போட்டுவருகிறார்கள்..