பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் தன்னுடைய குணத்தால் கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் வெளியேறியதும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. மேலும் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட தற்போது மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களில்  ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும், சுஜா வருணிக்கு ஓவியாவின் மைக் மற்றும் அவருடைய பெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்து நடன இயக்குனர் காயத்ரி, நீ ஓவியா போல் நடந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார். 

மேலும் ஓவியாவை நான் எப்படி திட்டுவேனோ அதே போல், உன்னையும் திட்டுவேன் என்றும் கூறுகிறார், இதற்கு சுஜா வருணி நீங்கள் திட்டிக்கொள்ளுங்கள் உங்கள் மீது தவறு இருந்தால் நானும் திட்டுவேன் என கூறுகிறார்.

அதற்கு காயத்ரி... திட்ட கூடாது எழுந்து செல்ல வேண்டும் என கூற அதற்கு ஆரவ் 'நீங்க ஓவியாவா மாற போறீங்களா?' என்பது போல் கேட்கிறார். அதற்கு சுஜா நான் ஓவியாவாக மாறினால் ஆரவ் நீங்க தான் பாவம் என கூறுகிறார். இதனை கேட்ட ஆரவ் மாற வேண்டாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என கூறுகிறார்.

இதற்கு சுஜா ஓவியா ஸ்டைலில் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்று கூறியும், ஓவியா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஓவியா ஒருவர்தான் என கூறுகிறார்.