பகைவரையும் சிரிப்பால் நண்பராக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு வித்தைதான். இந்த வித்தையை கையாள தெரியாதவர்கள் மட்டும் தான் எதிரியாக பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இப்போது சிரிப்பால் தான் வெடித்துள்ளது புது பிரச்சனை. பிக் பாஸ் குரல் "வையாபுரி" மற்றும் "சினேகன்" பெயரை கூறி இவர்களில் யாரை வெளியேற்ற நினைக்கிறீர்கள் என கேட்கிறது. 

இதற்காக மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு பேரில் யாரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என தீவிரமாக ஆலோசித்து வருகிறனறனர். இதற்கு ரைசா நான் சினேகனை ஆதரிப்பதாக கூறுகிறார். இதற்கு காயத்ரி மற்றும் சக்தி வையாபுரி தான் இந்த வீட்டில் மூத்தவர் ஒரு முடிவை எடுக்கும் தகுதி அவருக்கு உண்டு என கருதுவதாக தெரிவிக்கிறார்.

உடனே ரைசா "எதாவது பிரச்சனை என்று வந்தால்"  என்று கூறியதும் என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் என காயத்திரி கூறியதும், காயத்ரியை பார்த்து ரைசா கேவலமாக சிரிக்கிறார்.

உடனே கோபப்படும் காயத்ரி ஏன் சிரிக்கிறாய் என கூறி... இதை ஒரு பெரிய பிரச்சனையாக நினைத்து அனைவரிடமும் குறை கூறிக்கொண்டு இருக்கிறார். இதை தொடர்ந்து இன்னும் என்ன பிரச்சனைகள் வெடிக்கும் என இன்று தெரியவரும்.