பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன் ஃபுல் போதையில் சொகுசு கார் ஓடியதாக போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கினார்.
பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன் ஃபுல் போதையில் சொகுசு கார் ஓடியதாக போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கினார். மேலும் இவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், காயத்திரி ரகுராமுக்கு அபராதம் விதித்ததோடு.. அவரை கார் ஓட்ட அனுமதிக்காமல் போலீசாரே அவரை வீட்டில் அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, விளக்கம் கொடுத்த காயத்திரி ரகுராம்... இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் நான் காரை வேகமாக கூட ஓட்டவுமில்லை என்றும் கூறி என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிவித்திருந்தார்.
அதே போல், இந்த சம்பவம் அரங்கேறிய போது பிக்பாஸ் சீசன் 1 - ல், வையல் கார்டு சுற்று மூலம் உள்ளே வைத்த தொகுப்பாளர் கஜால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை மறுத்ததோடு "இது என்ன புது கதையாக இருக்கிறது' என கூறினார்.
இந்நிலையில் காயத்திரி வெளியிட்ட காணொளியில் அவரது அம்மாவும் தனது மகள் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் " மேடம் உங்களை பற்றி இப்படி தகவலை பரப்பியது ஜுலி தானா? என கேட்க அதற்கு காயத்திரி ஜுலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவளை நான் சந்தித்து பல நாட்கள் ஆகிறது என்று கூறியுள்ளார். இதில் இருந்து எந்த தப்பு செய்யவில்லை என்றாலும் பாவம் தொடர்ந்து ஜூலியின் பெயர் அடிபட்டு கொண்டே இருக்கிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2018, 1:38 PM IST