மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க ஒரு டஜன் இயக்குநர்கள் அணி வகுத்து கிளம்ப, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெப் சீரிஸாக இயக்க உள்ளார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் நித்யாமேனன் நடிக்கும் படத்திற்கு "தி அயர்ன் லேடி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயன்று வருகிறார்கள். 
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா பாத்திரத்தில் நடிக்க உள்ள வெப்சீரிஸை பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் மேனன் இயக்க இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்க இருகிறார். மொத்தம் 30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இத சீரியல் ப்ல எபிசோடுகளாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஒவ்வொரு எபிசோடுக்கும் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவிடப்பட இருக்கிறது.


விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கவுதம் மேன தனுஷை வைத்து உருவாக்கி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசான பிறகு இந்தப் பணிகளை தொடங்க இருக்கிறார் கவுதம் மேனன்.