காதல் படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனரான கவுதம் மேனன் (Gautham menon), சமீபத்திய பேட்டியில் வடிவேலு உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு (vadivelu). இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு (Vadivelu). சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு. சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காதல் படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனரான கவுதம் மேனன்(Gautham Menon), சமீபத்திய பேட்டியில் வடிவேலு உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறேன். அது ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும். வடிவேலுவால் அதை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.