ஒருதடவை அவங்கள அடிச்சி கொன்னுட்டு சாகுங்க! சுதந்திர போராட்டதை கண் முன் நிறுத்தும் '1947' ட்ரைலர்! வீடியோ
ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக்கூடிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் குடியரசு தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி கூற வந்துள்ளது.
கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்த படத்தின் காட்சிகள் தேசபக்தி மற்றும் படத்துடைய ஆன்மாவை தாங்கி நிற்கிறது. இதுவரை போராட்டக்காரர்கள் மட்டுமே பல படங்களில் கூறி இருந்த நிலையில், அப்போதைய சாமானிய மக்கள் பற்றியும் அவர்களின் மன நிலை குறித்தும் இப்படம் பேசியுள்ளது. இதில் கெளதம் கார்த்திக் இதுவரை வெளிப்படுத்தாத ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.
44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் சார்பில் ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஆதித்ய ஜோஷி ஆவார். கெளதம் கார்த்திக், புகழ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தக் கதையை NS பொன்குமார் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.