Soori Garudan Movie : இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் தான் கருடன். இந்த படத்தில் நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் துணை நடிகராக பல திரைப்படங்களில் தோன்றி, பின் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, அதன் பிறகு முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக உருமாறி உள்ளார் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக பல திரைப்படங்களில் கலக்கி வந்தார் நடிகர் சூரி. 

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்கின்ற படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த திரைப்படம் அதுவரை நடிகர் சூரி மீது இருந்த ஒரு பார்வையை முற்றிலும் மாற்றியமைத்தது. வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்து வருகிறார். 

தனுஷ் - நாகார்ஜுனா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் தேசிய விருது இசையமைப்பாளர்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இந்த சூழ்நிலையில் கொட்டு காளி என்கின்ற திரைப்படமும் சூரி நடிப்பில் உருவாகி வருகிறது. தொடர்ச்சியாக நல்ல பல கதைகளை ஏற்று நடித்து வரும் சூரி, அடுத்தபடியாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் "கருடன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நேற்று இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

இந்த திரைப்படத்திற்கான கதையை எழுதியது வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி மாறன் அவர்கள் தனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு நபரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய திரைப்படம் தான் கருடன் என்றும், குறிப்பாக சொக்கன் என்கின்ற அந்த கதாபாத்திரம் சூரிக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றும் இப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் துரை செந்தில்குமார் இந்த திரைப்படத்தில் சூரி மட்டுமல்லாமல் சசிகுமார், சமுத்திரகனி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்று கூறியுள்ளார். ஒரு கோவிலை சுற்றி நடக்கும் கதைக்களம் கொண்ட இந்த படம் மக்கள் அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்..

அயோத்தி ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு.. நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல்!