ganja karuppu talks about namitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதா மிரட்டுவதை பார்த்தால் அடிச்சுபிடிச்சுபுடுமோ என பயமா இருக்கு என்று கஞ்சா கருப்பு பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நமிதாவுக்கு ஹைஜினிக் ( சுத்தமானவர் என்ற விருது வழங்கப்பட்டது. அதை பெற்றபோது சினேகன் நமிதாவை பற்றி பேசினார், நமிதா சுத்தத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். குறிப்பாக டாய்லெட் , பாத்ரூமை சுத்தமாக பராமரிப்பதும், அதை எப்படி பராமரிப்பது என்று வகுப்பே எடுக்கிறார் ஆகவே அவருக்கு இந்த விருது என்று கூறினார்.

அப்போது திடீரென்று மேடை ஏறிய கஞ்சா கருப்பு அக்கா நமிதா அக்காவுக்கு இந்த விருது கொடுத்தது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி , இந்தம்மா என்னை அதை எடு இதை எடு என கூப்பிட்டு சுத்தமா இருப்பதற்காக மிரட்டுவார் அவங்க உடம்பை பார்த்தாலே அடிச்சுகிடிச்சுப்புடுவாங்களோன்னு பயம் எனக்கு என்று கூற அதை கேட்டு நமிதா சிரித்தப்படி நான் மிரட்டவில்லை எனக்கு சுத்தம் இருக்கணும் அவ்வளவுதான் என்று கூறினார்.