நடிகர் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் பாவாடை தாவணியில் வந்தாலும், அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். 

பாலிவுட் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கி வந்தாலும், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து, தொடர்ந்து இரண்டு வருடம், தேசிய விருதை பெற்று தனக்கென தனி அங்கீகாரத்தை பிடித்து வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் 'சலோ ஜேட்டீ ஹெய்ன்' என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகை கங்கனா, விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, இவரிடம் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்களா "பிரதமராக இருப்பதற்கு தகுதிவாய்ந்தவர் நரேந்திர மோடி தான் என்றும், ஜனநாயகத்தின் சரியான தலைவர் என்ற அடிப்படியில், மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.