gangana ranawath manikarnikaa movie issue
பத்மாவத்:
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பாலிவுட் நடிகை தீபிக்கா படுகோனே, ரன்வீர் சிங், மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் நடித்து, பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வெளியாகி வசூலில் 1000 கோடியை நெருங்குகிறது 'பத்மாவத்' திரைப்படம். இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்ததாக கூறி பல பிரச்சனைகள் வந்து ஓய்ந்தது அனைவரும் அறிந்தது தான். தற்போது இதே போல மற்றொரு படத்திற்கும் பிரச்சனை எழ ஆரம்பிதுள்ளது.
கங்கனா ரனவத்:
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனவத் தற்போது விடுதலை போராட்ட வீரங்களை 'ஜான்சி ராணியின்' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மணிகார்னிக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
சர்ச்சை:
இந்த திரைப்படத்தை தமிழில் நடிகை சிம்பு மற்றும் அனுஷ்காவை வைத்து 'வானம்' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரீஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'ஜான்சிராணி லட்சுமிபாய்' வெள்ளைக்காரக் அதிகாரி ஒருவரை காதலிப்பது போல் சித்தரித்து காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பிராமண அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வெடித்துள்ள இந்த பிரச்சனை மேலும் தொடருமா? அல்லது முடிவிற்கு வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
