விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்காமல் மோதி வருகிறார்கள். இந்நிலையில் 7 ஆவது சுற்றில் பாலாவுடன் கேபி மோதிய காட்சிகள் தற்போது புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் ஏற்கனவே 6 சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7வது சுற்று நடைபெறுகிறது. இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

7 ஆவது சுற்று மிகவும் வித்தியாசமாக நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் இருவர் கலந்து கொண்டு விளையாட வேண்டும். ஒரு வட்டத்தின் நடுவே உள்ள பந்துகளை உருண்டு சென்று, அதனை மறு பக்கத்தில் இருக்கும் வட்டத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும். 
பின்னர் மற்றொருபுறம் உள்ள பந்துகளை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். 

இதில் கடைசியாக முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பாலாஜி மற்றும் கேபி ஆகியோர் இடையே நடைபெறுவது போல் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட இருவருமே ஒரே நேரத்தில் டாஸ்க்கை முடித்துள்ளனர். எனவே வெற்றியாளர் யார் என்பதை 3வது அம்பயர் முடிவு செய்வார் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். 

இதுவரை மிக குறைவான புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருந்த கேபி இந்த முறை, பாலாவுடன் போட்டி போடும் அளவிற்க்கு, சிறப்பாக விளையாடி உள்ளது இந்த புரோமோவில் இருந்து தெரிகிறது. எனினும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கை கைப்பற்றி இறுதி போட்டிக்கும் நுழைவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.