valimai release : திரையரங்குளில் 100 % இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

அந்த வகையில், வலிமை படத்தை மதுரையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த நடிகரின் படமும் இந்த மாதிரி வெளியிடப்பட்டது இல்லையாம். இதன்மூலம் அஜித்தின் வலிமை திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுதவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது..இதன் பொருட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது..அந்த வகையில் இன்று ஊரடங்கு தளர்வுகள் குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் சுகாதாரத்துறையுடன் ஈடுபட்டிருந்தார் .. இந்த கூட்டத்திற்கு பின்னர் தளர்வுகள் குறித்துஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..அதில் தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்த வரும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை.. சமூக, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

மேலும் போடப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறிப்பிடப்படுள்ளது.. இந்த அறிவிப்பில் அதோடு பிப்ரவரி 16 முதல் திரையரங்குளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.... இதனால் வலிமை படம் கட்டாயம் கணித்த வெற்றியை பெற்று தரும் என படக்குழுவினரும் வலிமை குறித்த கொண்டாட்டத்தில் ரசிகர்களும் உள்ளனர்..