நடிகர் அஜித்தின் மேனேஜர் வீட்டில் பாம்பு வளர்த்து வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  நடிகர் அஜித் என்றாலே தமிழகத்தில் இளைஞர்களுக்கு  அளப்பரிய  பிரியம்  உண்டு ,  ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பு ஆற்றலால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நடிகர் அஜித் .  அவர் ஒன்றைச் சொன்னால் அதை தலைமேல் ஏற்று செய்யக்கூடிய ரசிகர்கள் தமிழகத்தில்  ஏராளமானோர் உள்ளனர்.  

அப்படிபட்ட  நடிகரின் மேலாளராக இருப்பவர் செய்துள்ள செயலால்  திரையுலகில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள  அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  தல அஜித் குமாரின் மேலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா ,  அவரது  உதவியாளர் நாசர் ,  இவர்கள் திரைப்படங்களுக்கு பிஆர்ஓக்களாக இருந்து வருகினர்,  அதேபோல்  நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் எனப்படும்  நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் ஈவென்ட் மானேஸ்மென்ட்  நடத்தி வருகின்றனர். காட்டு விலங்குகளை  வீட்டில் வளர்ப்பது கூடாது என சட்டம் நிலுவையில் இருந்து வருகிறது . இந்நிலையில் சுரேஷ்  சந்திராவும்,  நாசரும் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.

 அதற்கு உணவாக எலியை வழங்கி வந்துள்ளனர்.  இந்த விஷயம்  மெல்ல  வெளியில் கசிய ஆரம்பித்தது , அது வனத்துறை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து  அவர்கள் வளர்த்து வந்த  மலைப்பாம்பை கைப்பற்றியுள்ளனர் . அத்துடன் அவர்கள்  மீது வனவிலங்கு சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் இதுகுறித்த தகவல்களை உறுதிசெய்யப்படவில்லை .