2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் 'Forbes' இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பத்து இடங்களில் எந்த தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் இடம்பெறவில்லை, என்றாலும் 13வது இடத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.
30வது இடத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பிடித்துள்ளார், 33வது இடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும், 46வது இடத்தில் ஸ்ருதிஹாசனும் உள்ளனர்.
அதே போல் 47வது இடத்தில் தனுஷும், 49வது இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் உள்ளனர்.
ரஜினியைவிட ஏ.ஆர்.ரஹ்மானும் , கமல்ஹாசனை விட அவரது மகள் ஸ்ருதிஹாசனும் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களை பெற்ற நட்சத்திரங்களின் பெயர்களை தற்போது பார்ப்போம்
1. சல்மான்கான்
2. ஷாருக்கான்
3. விராத் கோஹ்லி
4. அக்சயகுமார்
5. மகேந்திரசிங் தோனி
6. தீபிகா படுகோனே
7. சச்சின் தெண்டுல்கர்
8. பிரியங்கா சோப்ரா
9. அமிதாப்பச்சன்
10. ஹிருத்திக் ரோஷன்
மேலும் இந்த பட்டியலில் 51வது இடத்தில் சூர்யாவும், 53வது இடத்தில் காஜல் அகர்வாலும், 61வது இடத்தில் இளையதளபதி விஜய்யும், 72வது இடத்தில் சீயான் விக்ரமும், 90வது இடத்தில் பிரபுதேவாவும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
