பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் நிறைவு பெற உள்ளது. இதனால் பலர் இந்த முறை டைட்டில் வின்னராக யார் வருவார், யார் வெளியே செல்வார் என மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். 

16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முதல் சீசன் போல், மிகவும் பரபரப்பாக இல்லை என்றாலும், கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் முறையாக பாலாஜி, யாஷிகா ஆகிய  2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த முறையாவது ஐஸ்வர்யா வெளியேறுவார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்த, ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்களில் ஒருவரான நடிகை யாஷிகா வெளியேற்றப்பட்டார்.  இது பலருக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல மாற்றங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறி வருகிறது. தற்போது நான்கு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளதால், நிகழ்ச்சியின் மீது உள்ள சுவாரஸ்யத்தை கூட்ட, வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்து செல்கிறார்கள். அதன் படி இன்று பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் உள்ளே வர உள்ளனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய மனதில் உள்ளதையும், பிக்பாஸ் பட்டத்தை தான் கைப்பற்ற விரும்புவது ஏன் என்பது குறித்தும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  2 வாரங்களிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்று விடுவேன் என நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து 14 வாரங்கள் மக்கள் என்னை காப்பாற்றி வருகிறார்கள். இதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதன் மூலம் தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு இரண்டு ஆசைகள் உள்ளது. அது என்னவென்றால் தமிழ் மக்கள் எனக்கு கிறீன் கார்ட் கொடுத்து அவர்களில் என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று நான் வெற்றி பெற வேண்டும் என்பது தான். ஆனால் நான் வெற்றி பெற நினைப்பது 50 லட்சம் பணத்திற்காக இல்லை.  எனக்கு அந்த பணம் வேண்டாம்... ஆனால் நான் இறுதி மேடையில் ஏற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக தமிழக மக்கள் தன்னை ஏற்றுக்கொண்டு என் கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என கூறியுள்ளார். இவர் செய்த அராஜகங்களுக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.