அக்டோபர் 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பமான, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பானது. பிக்பாஸ் முதல் சீசனை பீட் பண்ணமுடியாது என்றாலும், கடைசி இரண்டு சீசன்களை விட, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த ஷோ நகர வேண்டும் என்பதே ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் நாளான நேற்று, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் தளபதியின் 'வாத்தின் கம்மிங்' பாடலுடன் கண் விழித்தனர். 

மேலும் முதல் தலைவரை தேர்வு செய்யும் போட்டி ஒன்றையும் பிக்பாஸ் நடத்தினார். அதாவது, பிக்பாஸ் கார்டன் ஏரியாவில் போடப்பட்ட ஒரு கோட்டை சுற்றி அணைத்து பிரபலங்களையும் நிற்க செய்தார். பின்னர் அந்த கோட்டின் நடுவில் கட்ட பட்டிருந்த ஒரு மூட்டையை அவிழ்க்க சொன்னார். அதில் மஞ்சள், நீலம், சிவப்பு என கலர் கலராக மொத்தம் 15 பந்துகள் இருந்தது.

இந்த பந்துகளை 15 போட்டியாளர்கள் எடுத்த பின், ஒரு போட்டியாளருக்கு மட்டும் பந்து இல்லை. பந்து கிடைக்காமல் போனது வேறு யாருக்கும் அல்ல, இடுப்பழகி  ரம்யா பாண்டியனுக்கு தான். அவரை, கன்பெஷன் அறைக்கு வர சொல்லும் பிக்பாஸ், இந்த வாரத்திற்கான தலைவர் என அறிவிக்கிறார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் உள்ள அணைத்து போட்டியாளர்களும் தினமும் சமைத்து சாப்பிட்டு இருக்க வேண்டும், பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும், பிக்பாஸ் வீடு மற்றும் பாத்ரூம் போன்றவை மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். 

கேப்டன் பதவியை ஏற்ற ரம்யா, இதனை கெத்தாக போட்டியாளர்களிடம் கூறாமல்,  தயங்கிய படியே இந்த தகவலை கூறி, சமைப்பது, வெசல் வாஷ், பாத்ரூம் கிளீனிங், மற்றும் வீடு சுத்தம் செய்ய என தனி தனி அணிகளை பிரித்து தன்னுடைய கடமையை நிறைவேற்றினார்.