தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்த படம் தான் "துள்ளாத மனமும் துள்ளும்", இந்தப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கிராமப்புறங்களிலும்  விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்ல, தற்போது விஜயின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எழில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது எழில் முதலில் இந்த படத்திற்கு "ருக்குமணிக்காக" என்று தான் டைட்டில் வைக்க இருந்துள்ளார்.

அதன் பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளர் "பார்த்தாலே பசி தீரும்" இப்படியான ஸ்டைலில் தலைப்பு வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தான் இப்படத்திற்கு எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" என வைத்ததாக கூறியுள்ளார்.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் #20YearsOfEvergreenSuperhitTMT என்ற டேக் உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.