First ever Kollywood Teaser to cross 10 Millionviews in 24 hours
தெறி படத்தின் வெற்றிக்குப்பின் அட்லீ விஜயின் கூட்டணியில் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் மெர்சல் படத்தின் டீசர் தமிழகத்தில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் என்றாலே தாறுமாறு சாதனை தான் தமிழில் மட்டும் இல்லை மலையாளம், தெலுங்கிலும் மிக பெரிய சாதனை படைத்துவருகிறது. அட்லீ இயக்கத்தில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக உருவாக்கியுள்ளது. தளபதி விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
.jpg)
வரும் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதால் தற்போது மெர்சல் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளிவந்து உலக சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் Adirindhi என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தீபாவளிக்கு ரிலிஸ் செய்யவுள்ளனர். Adirindhi டீசர் சமீபத்தில் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 150K லைக்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கில் மெர்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
