பிக்பாஸ் சீஸன் 3’நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து ரன்னிங் கமெண்டரி கொடுத்து வரும் முன்னாள் போட்டியாளர் நடிகை இந்த வார எலிமினேஷன் கண்டிப்பாக பாத்திமா பாபுதான் என்று அடித்துக்கூறுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் அந்த நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டுப் புட்டு வைத்து வருகிறார் காஜல் . பிக் பாஸ் முதல் சீசனில் பாதியில் சென்று பங்கு பெற்ற  இவர் ரசிகர்களிடம் எந்த ஒரு கெட்ட பெயரும் வாங்காமல் போட்டியிலிருந்து வெளியே வந்தார். 

இவரின் முழு நாள் வேலையே தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது தான். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சி குறித்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. அதில் பாத்திமா, சேரன், கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா கவின், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வார பிக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் எலிமினேஷன் குறித்து வெறுமனே ஆருடம் மட்டும் கூறாமல் அதற்கான காரணத்தையும் கூறுகிறார் காஜல். ‘பிக் பாஸைப் பொறுத்தவரை கண்டெண்ட் கொடுக்காதவர்களைத்தான் முதலில் வெளியேற்றுவார்கள். அந்த வகையில் மீரா மிதுனுக்கு எலிமினேஷன் ஆபத்து இல்லை. இப்போதைக்கு கண்டெண்ட் இல்லாமல் முழித்துக்கொண்டிருப்பவர் ஃபாத்திமா பாபுதான்.எனவே அவரைத்தான் முதலில் வெளியேற்றுவார்கள்’என்கிறார்.