கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் தன்னுடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் பட தயாரிப்பிற்காக விஜய் கோத்தாரி என்ற பைனான்சியரிடம் ரூ.50 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதை 6 வருடங்கள் கழித்து 2015ம் ஆண்டு திருப்பி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். ஆனால் விஷால் சொன்ன படி பணத்தை திருப்பி கொடுக்காமல், 2018ம் ஆண்டு சண்டக்கோழி 2 பட ரிலீசுக்குப் பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளும் படி காசோலை ஒன்றை விஜய் கோத்தாரியிடம் ஒப்படைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஜெயம் ரவி கொடுத்த ஷாக்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

அதன் பின்னரும் விஷால் பணத்தை தராமல் தொடர்ந்து இழுத்தடித்த நிலையில், பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 லட்ச ரூபாயை 9 சதவீத வட்டியுடன் பைனான்சியருக்கு செலுத்துமாறு கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விஷாலுக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் விஷால் ஒருவருடமாக பணத்தை திருப்பி தராமல் பைனான்சியரை இழுத்தடித்து வந்துள்ளார். 

 

இதையும் படிங்க: காதலி நயன்தாராவை அவசர அவசரமாக சென்னை அழைத்து வந்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் ஏர்போர்ட் போட்டோஸ்...!

தற்போது விஷால் தனது நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.  இதையடுத்து பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் அவரது வழக்கறஞர் மூலம் நடிகர் விஷால் மற்றும் ஓடிடி தளங்களான பி4U டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட், டிஸ்னி ஹாட் ஸ்டார்,நெட்ப்ளிக்ஸ், Zee 5, அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், படத்தை ஒடிடி தளங்களில் வெளியிடும் முன் விஷால் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு மீத பணத்தை விஷாலுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.