film director says the command to actress oviya
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் நடிகை ஓவியா எது செய்தாலும் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இளைஞர்கள்.
மேலும் ஓவியாவிற்கு பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பரணியின் ஆவி ஓவியாவுக்குள் இருக்கிறது. மற்றவர்கள் பரணியை கொடுமைப்படுத்தினார்கள், தற்போது ஒருவர் மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார் என்று டுவிட் செய்துள்ளார்.
ஏற்கனவே நான் ஓவியவிற்காக தற்கொலை செய்யக்கூட தயார் என்று இவர் ட்வீட் போட்டது வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் சாம்.
