Film Chamber and Producers Association threatned me so only i stop act Actor Suresh Gopi

ஃபிலிம் சேம்பரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை மிரட்டியதால்தான் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகரும் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி.

இவர் நடிகராக இருக்கும்போது பாஜகவில் சேர்ந்து தற்போது ராஜ்யசபா எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

ஆனால், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சுரேஷ்கோபி, “அரசியலில் ஈடுபட்டதால் நான் படங்களை நடிப்பதை நிறுத்தவில்லை. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டேன். அதன் வெற்றியை திரையுலகில் உள்ள ஒரு சிலரால் சகிக்க முடியவில்லை.

அதனால், ஃபிலிம் சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அந்த டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தித்தார்கள்.

மக்களோடு மக்களாக நேரடியாக கலந்து பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த ரியாலிட்டி ஷோவை விட்டுவிட நான் விரும்பவில்லை. அதனால், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.