BiggBoss Ultimate : சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதற்கு ஈடுகட்டும் வகையில் சிம்புவை களமிறக்கியது சற்று ஆறுதலை தந்தது.
பிக்பாஸ் அல்டிமேட்
ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். தமிழில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது முதன்முறையாக OTT-க்கென பிரத்தியேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மட்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஐந்து சீசன் போட்டியாளர்கள்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இந்நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே இதிலுள்ள போட்டியாளர்கள் தான். வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும், புதிய போட்டியாளர்களை களமிறங்குவர். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புது முயற்சியாக இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறங்கியுள்ளனர்.

கமல் அவுட்... சிம்பு இன்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே நம் மனதில் நினைவுக்கு வருவது கமல்ஹாசன் தான். இந்நிகழ்ச்சி பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமும் அவர்தான். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதற்கு ஈடுகட்டும் வகையில் சிம்புவை களமிறக்கியது சற்று ஆறுதலை தந்தது.
அனிதாவும்... சர்ச்சைகளும்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்படும் போட்டியாளர் என்றால் அது அனிதா தான். தன் வயிற்றில் பிக்பாஸ் குழந்தை வளர்வதாக கூறியது, சக போட்டியாளரான நிரூப்பை கெட்டவார்த்தையில் திட்டியது, சிம்புவை விமர்சித்தது என வாரம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

சுரேஷ் - அனிதா மோதல்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சக போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உங்களுக்குன்னு சொந்தமா ஒரு கருத்து கிடையாதா... எப்பவுமே அடுத்தவங்கள வச்சி தான் நீங்க பொழப்பு நடத்தணுமா... த்து-ன்னு சுரேஷ் சக்கரவர்த்தி காட்டமாக சொல்ல, இதைக் கேட்டு கொதித்தெழுந்த அனிதா, நிரூப்போட பெயரை பயன்படுத்தி, நான் குளிக்கும் போது ஒரு பாட்டு பாடுனீங்கள்ல.. அப்போ அறிவு இருந்திருக்கணும்னு பதிலடி கொடுக்க போட்டியாளர்கள் அதிர்ந்து போய் பார்க்கும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... Godfather movie : அட்ராசக்க... ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கான் உடன் கூட்டணி - மாஸ் காட்டும் நயன்தாரா

