பொதுக்குழுவைக் கூட்டாமலே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தொடர்ந்து சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து அவரது அதிருதியாளர்கள் சங்கத்துக்கு பூட்டுப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுக்குழுவைக் கூட்டாமலே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தொடர்ந்து சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்த்து அவரது அதிருதியாளர்கள் சங்கத்துக்கு பூட்டுப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று காலை 10 மணி முதலே தி.நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷாலின் மீது 14 முக்கிய குற்றச்சாட்டுகளுடன் பல தயாரிப்பாளர்கள் குவிய ஆரம்பித்தனர். தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி 7கோடி ரூபாய் என்னவானது என்பதில் துவங்கி பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் இளைராஜா இசை நிகழ்ச்சி வரை விஷால் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டாமலே தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

அவர்களை சங்கச்செயலாளர் கதிரேசன் சமாதானப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ‘இனி விஷால் தலைவராக இருக்கும் வரை சங்கம் செயல்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். சங்கம் பூட்டப்பட்ட பிறகு அருகிலுள்ள காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துவருகின்றனர்.