female director raise question against the critics

காளி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் மனைவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் , விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் கொஞ்சம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறது இந்த திரைப்படம்.

சில விமர்சகர்கள் காளி திரைப்படத்தை மிக மோசம் என விமர்சித்திருக்கின்றனர். இது போன்ற விமர்சனங்களால் கடுப்பான கிருத்திகா உதயநிதி , விமர்சகர்களையே விமர்சித்து ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

#Kaali thank u all for all ur support! The riots connect d 3 incidences like a ripple effect.. n d villians connect d flashbacks in diff aspects.. as a husband nd as d village.. no reviewer noticed or mentioned it! 1/1

— kiruthiga udhayanidh (@astrokiru) May 18, 2018

அதில் முதல் கட்டமாக காளி படத்திற்கு , அனைவரும் அளித்திருக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் . மூன்று வெவ்வேறு சம்பவங்களால் ஏற்படும் ,தொடர் விளைவுகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் , படத்தில் வில்லன் கடந்த கால நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் தொடர்பு படுத்தி பார்ப்பது , போன்ற பல நுணுக்கமான விஷயங்களை எந்த விமர்சகர்களும் கவனித்ததாகவே தெரியவில்லை. என தெரிவித்திருக்கிறார்.

I'm really happy dat #Kaali is out n getting great response wit d audience n sum reviewers! Thank u all! :)

— kiruthiga udhayanidh (@astrokiru) May 18, 2018

மேலும் பார்வையாளர்கள் மத்தியில் காளி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை நினைத்து தான் சந்தோசமடைந்ததாகவும், ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா.