உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸிற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவால் சினிமாத்துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதலே அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸுக்கு தயாரான புதுப்படங்கள் அனைத்தும் தேங்கியுள்ளன. 

இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டதால் பெப்சி சங்கத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி சந்தித்தார். அப்போது தமிழக அரசுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, இதற்கு முன்னதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று எப்படி போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதோ, அதேபோல் சின்னத்திரை ஷூட்டிங் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வீடு மற்றும் அரங்குகளில் நடைபெறும் சீரியல் ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் பெப்சியைச் சேர்ந்த 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

மேலும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளைப் போலவே சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு எந்த விதமான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளோம் எனக்கூறினார். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர், தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். எனவே சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்தால், மக்கள் புத்துணர்ச்சி கொள்ளும் விதமாக அமையும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.