RK Selvamani : நடிகர் அஜித், ஐதாராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள்  பாதிக்கப்படுகிறார்கள் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பதவி வகித்து வருகிறார். பொதுவாக தமிழ்நாட்டில் நடக்கும் சினிமா படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் தான் பாணியாற்ற வேண்டும் என்கிற விதிமுறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது.

சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க இயலாது என்பதை கருத்தில் கொண்டு தயாரிப்பாளருடன் பேசி, சென்னையில் படப்பிடிப்பை நடத்த அறிவுறுத்தினார் விஜய். இதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார்.

ஆனால் நடிகர் அஜித் மட்டும் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்கு பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “நடிகர் அஜித்திற்கு எங்களது கோரிக்கை உங்களுடைய படப்பிடிப்பை, இங்கேயே வைக்க வேண்டும், ஐதராபாத்தில் வைப்பதினால் பல தொழிலாளர்கள் உங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

எங்களுக்கும் சண்டை போட தெரியும், ஆனால் 5-6 வருஷமாக பேசி தீர்த்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் இருக்கிறோம். நடிகர் அஜித்குமாருக்கு எங்கள் வேண்டுகோள் ஐதாராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அஜித்குமார் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும். போனி கபூர், போன்றவர்களுக்கும் எங்களுடைய வேண்டுகோள் இது தான்” என கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Ramya Pandian : முழு முதுகையும் காட்டி... இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ரம்யா பாண்டியனின் கிக்கான போட்டோஸ்