fefsi employees problem in bigg boss house and shooting stop says report
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சென்னை பூந்தமல்லியில் பிக்பாஸ் வீட்டிற்காக போடப்பட்ட செட்டில் ஃபெஃப்சி ஊழியர்கள் பிரச்னை செய்துவருவதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மக்களின் ஆதரவையும் வாரி குவித்தார் ஓவியா. அதேபோல் பலரது முகத்திரைகளும் கிழிந்தன. பிக் பாஸில் கலந்துகொள்வதற்கு முன்னதாக சிலரது மீதான மக்களின் அபிப்ராயங்கள், அப்படியே தலைகீழாக மாறியது.

இந்நிலையில் முதல் சீசனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், இரண்டாவது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் இரண்டாவது சீசனுக்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு, அந்த வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜி, மும்தாஜ், டேனியல் போப், மகத், சென்ராயன், ஜனனி ஐயர் உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை 4 நாட்கள் வீட்டில் நடந்த சம்பவங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் சில எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. பிக்பாஸ் தொடங்கி ஒரு வாரம் கூட முழுமையாக முடியவில்லை. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஃபெஃப்சி ஊழியர்கள் பிரச்னை செய்துவருவதாகவும் அதனால் பிக்பாஸ் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் இதுதொடர்பான விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
