feeling proud of tamil says famous camera man

தமிழ் என்று சொன்னாலே தனி பெருமை தான். அதிலும் நம் மொழியை பிற இடங்களில் பேசும் போதும், எழுத்து வடிவில் பார்க்கும் போதும், நம்மை அறியாமலே நாம் பெருமிதம் கொள்வோம். அப்படி ஒரு சம்பவத்தை தான், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர்.

பிரபல ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி வில்லியம்ஸ், தெறி, கத்தி, நானும் ரவுடி தான், இரும்புத்திரை போன்ற பல வெற்றித்திரைப்படங்களில் பணியாற்றி இருப்பவர் இவர் சமீபத்தில் எமிரேட் விமானத்தில் துபாயிற்கு பயணம் செய்திருக்கிறார்.

#Tamil feeling proud #emirates enroute #dubai...Jai Hind pic.twitter.com/L0rmspygeN

— george c williams (@george_dop) June 19, 2018

அப்போது அங்கு தரப்பட்ட உணவுப் பட்டியல் தமிழில் இருந்தது. தமிழ் மொழியில் அவர்கள் உணவுப் பட்டியல் அச்சடித்திருப்பதை பார்த்து, மகிழ்ச்சி கொண்ட ஜார்ஜ், அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் தமிழை நினைத்தாலே பெருமிதமாக இருக்கிறது…! ஜெய்ஹிந்த்…! எனவும் கூறி இருக்கிறார்.