Fears about the story - first look is delaying
வெளிச்ச நடிகர் நடிக்க கடவுள் இயக்குநர் இயக்கும் படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் தாமதமாக காரணமே கதைத் திருட்டு தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹிந்தியில் வெளியாகி சூப்ப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை தழுவித் தான் வெளிச்ச நடிகரின் படம் உருவாகிறதாம்.
இந்தப் படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமை சீனியர் நடிகர் ஒருவரிடம் இருக்கிறது. அவர் தனது மகனை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அந்தக் கதையை தழுவி இப்படி ஒரு படம் உருவாவதால் அந்த நடிகர் செம டென்ஷனில் இருக்கிறாராம். டீசர் வரட்டும் கோர்ட்டுக்கு போகலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம்.
எனவே தான் டீசரை வெளியிடாமல் இழுத்தடிக்கிறதாம் யூனிட். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அதனையொட்டி ஃபர்ஸ்ட் லுக், டீசரை வெளியிடலாம் என்பது நடிகரின் ஐடியா.
