பிக் பாஸ் சீசன் 3 தற்போது தொடங்கிவிட்டது. பரபரப்பு கொஞ்சம்கூட குறைவே இல்லாமல் முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சீசனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு, நடிகர் சரவணன், கவின், இயக்குனர் சேரன் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, தர்ஷன் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லிக் கொண்டு, அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அப்போது பிக்பாஸ் இல்லத்தில் எரிவாயு மற்றும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என பிக்பாஸ் சொல்லவே அனைத்து போட்டியாளர்களும் கைதட்டி சிரிக்கின்றனர். 

இதற்கு மாறாக சற்று கோபப்பட்டு பேசிய செய்திவாசிப்பாளார் பாத்திமா பாபு, "இந்த விஷயத்திற்கு நாம வெட்கப்படனும்... தண்ணீர் குறைபாடு என்பது ஒரு அவல நிலை... இதனை கைதட்டி வரவேற்க கூடாது" என சற்று கோபமாக சொன்னார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் சேரன், "தண்ணீர் சிக்கனம் கடைபிடிப்பது நல்லது என்பதற்காக தான் கை தட்டினோம் என தெரிவித்து இருந்தார்.