இந்திய அளவில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராக விளங்கியவர் ஷர்பாரி தத். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர், பாலிவுட்டின் பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். 63 வயதாகும் ஷர்பாரி தத் தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான  ஷர்பாரி தத், அவருடைய வீட்டின் பாத்ரூமில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷர்பாரி தத்தின் மகன் அமலின் தத், இவர் தனது அம்மாவின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வருகிறார். நேற்று முழுவதும் அம்மா தனது போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அமலின், அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது குளியலறையில் ஷர்பாரி நினைவின்றி கிடந்துள்ளார். சரியாக நேற்று இரவு  11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: தொடர் சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

மேலும் குடும்ப மருத்துவரும் அங்கு வந்து ஷர்பாரி உடலை பரிசோதித்துள்ளார். ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே இறந்து போனது தெரியவந்துள்ளது. மாரடைப்பு காரணமாக ஷர்பாரி உயிரிழந்திருப்பதாக அவருடைய குடும்ப மருத்துவர் உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவர் உடற்கூராய்வுக்கு அவரது உடலை போலீஸார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க போலீஸ் தொடங்கியுள்ளனர். இதையடுத்து முன்னணி பேஷன் டிசைனரான ஷர்பாரி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.