பிக்பாஸ் சீசன் 3 ரியாலிட்டி ஷோ நாளை இரவு 8 மணி முதல் துவங்க உள்ளதால்,  இந்த நிகழ்ச்சி குறித்த பல தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகி வருகிறது.  கடந்த இரண்டு சீசனை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் தான் பிக் பாஸ் சீசன் 3 வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

ரசிகர்களும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் பங்கேற்கவுள்ள 15 போட்டியாளர்கள் யார் யார் என தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா மற்றும் இசை வித்வான் மோகன் வைத்யா ஆகியோர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற பிரபலங்கள் யார் என்கிற தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமான  வெளியாகவில்லை.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலமும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், நாளை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் பற்றி தெரிய வந்துவிடும் என்பது உறுதி.