சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை விழாவில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்கிற பாடலை பாடிய சித் ஸ்ரீராமை (Sid Sriram) நெட்டிசன்கள் மீம் போட்டி கிண்டலடித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், அடியே பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். ஏ.ஆர்.ரகுமானே அறிமுகம் செய்ததால், இவருக்கு அடுத்தடுத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடும் வாய்ப்பு எளிமையாக கிடைத்தது.

அந்த வகையில், அனிருத், டி இமான், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, சந்தோஷ் நாராயணன் என அனைவரது இசையிலும் இவர் பாடிய பாடல்கள் தனித்துவமாக விளங்கியதோடு மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவர் தெலுங்கில் பாடினாலும் அப்பாடல் தமிழ்நாட்டில் ஹிட்டாகும் அளவுக்கு இவரின் பாடல்களுக்கென தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்கிற பாடல் காலத்தால் அழியாத ஒன்று, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பாடல் ஆகும். 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை விழாவில் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார். தன்னுடைய பாணியில் அவர் பாடிய இந்த பாடல் நெட்டிசன்களுக்கு மீம் கண்டெண்டாக மாறி உள்ளது. அவரை கிண்டலடித்து ஏராளமான மீம் வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…