Asianet News TamilAsianet News Tamil

Valimai FDFS : பால் பாக்கெட்டில் அடி வாங்கிய போனி கபூர்?..அஜித் ரசிகர்களுக்கு என்னப்பா கோபம்..

Valimai FDFS : காலையில் திரையரங்குக்கு வந்த தயாரிப்பாளர் போனி கபூரின் கார் மீது திடீரென பல் பாக்கெட்டை எரிந்ததால் போனி கபூர் அதிர்ச்சியடைந்துள்ளார்..

fans threw up the milk packet on the boney kapoor car...
Author
Chennai, First Published Feb 24, 2022, 8:00 PM IST

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.  குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

fans threw up the milk packet on the boney kapoor car...

இப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்க்க வலிமை படக்குழுவினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களோடு காலை 4 மணிக்கே திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்தனர். 

போனிகபூர் காரில் வந்தபோது தியேட்டர் முன் குவிந்திருந்த அஜித் ரசிகர்கள், அவரது கார் மீது பால் பாக்கெட் மற்றும் தயிர் பாக்கெட்டை எரித்துள்ளனர்... இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்..உண்மையில் ரசிகர்கள் அன்பில் செய்ததை நெட்டிசன்கள் ஆத்திரத்தில் என மாற்றி விட்டனர்..

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios