ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களின் கட்-அவுட்டுக்கு இதுவரை பாலாபிஷேகம் செய்வதைத்தான் பார்த்திருக்கிறோம். இதோ விஞ்ஞான அறிவு வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஒரு கன்றுக்குட்டியை வெட்டி தங்கள் ஹீரோவின் கட்-அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் செய்திருக்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.

கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியான ‘தி வில்லன்’ கன்னடப்படத்துக்குத்தான் இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியுள்ளது. ஷிவ்ராஜ்குமார், ‘நான் ஈ’ சுதீப் மற்றும் எமி ஜாக்சன்  நடித்துள்ள’வில்லன்’ படம் மாபெரும் வெற்றிகண்டுள்ளது. 

இந்த வெற்றியின் மிதப்பில் ஒரு தியேட்டர் அருகே திரிந்துகொண்டிருந்த எருமைக் கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டிப்போடும் ரசிகர்கள், அந்த ஸ்பாட்டிலேயே அதன் தலையை வெட்டி ஷிவ்ராஜ்குமார் போஸ்டருக்கு ரத்தாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்தச் செய்தி தற்போது வலைதளங்களில் வைரலாக பரவிவரவே, நாயகன் ஷிவ்ராஜ்குமார்,வில்லன் சுதீப் மற்றும் தயாரிப்பாளர்கள், ‘படத்தின் வெற்றியை மற்றவர்களுக்கு இனிப்பு கொடுத்தோ,வெடிவெடித்தோ கொண்டாடுங்கள். இம்மாதிரி அநாகரீக செயல்களில் ஈடுபடாதீர்கள்’ என்று கண்டித்து வருகிறார்கள்.