சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திருமண நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பாக நுற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்..

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் (mysskin) என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.
ஆனால் இயக்குனர்கள் இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன் (Nelson). தற்போது விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.

இதற்கிடையே ரஜினி தனது மக்கள் ஐஸ்வர்யா அவரது கணவர் தனுஷும் பிரிவது குறித்து மிகுந்த மனா அழுத்தத்தில் இருந்தார் என சொல்லப்பட்டது..இருவரும் தனது பேச்சை கேட்காதது குறித்தும் வருத்தப்பட்டுள்ளார் ரஜினி..

இதற்கிடையே ரஜினி 169 - கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். மேலும் ரஜினி கோர்ட் சூட்டில் அணிந்து கெத்தான தோற்றத்தில் இருக்கும் மாஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

இவ்வாறு தலைவர் 169 படப்பிடிப்பு துவங்க இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ரஜினி தனது வழக்கமான ஹெல்த் செக்கப்பிற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில தினங்கள் தங்கி, தன்னுடைய வழக்கமான செக்கப்பை முடித்து விட்டு பின்னர் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது..

இந்நிலையில் ரஜினிகாந்த-லதா ஸ்டார் தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு வாழ்த்து கூற ரசிகர்கள் போயஸ் கார்ட்டனில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு குவிந்தனர்..பின்னர் தலைவா தலைவா என கோஷமிட்ட ரசிகர்கள் ஒருமுறை முகம்காட்ட கோரிக்கை விடுத்தனர்..இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு எட்ட நின்று தரிசனம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது...