தங்களது மானசீக ஹீரோக்கள் நாப்பது, ஐம்பது கோடிகளில் சம்பளம் வாங்கி கல்யாண மண்டபங்களில் இன்வெஸ்ட் பண்ணிக்கொண்டிருக்க, அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத அப்பாவி ரசிகர்கள் கோவணத்தில் இருக்கிற கொஞ்சநஞ்சப் பணத்தையும் எடுத்து அவர்களது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணிக்கொண்டிருப்பது முடிவுக்கே வராத வாடிக்கை.

இங்கே சிலர் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்க நடுரோட்டில் வைத்து ஆட்டை அறுத்து பலிகொடுத்துக்கொண்டிருப்பவர்கள் சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தினர். தலீவரின் ‘2.0’ வெற்றிக்காக இந்த வேண்டுதலாம். ஆட்டை அறுத்தா  படம் ஹிட்டாயிடுமா மிஸ்டர் பலியாடுகளே?

டியர் அனிமல் வெல்ஃபேர் போர்டு மெம்பர்ஸ் புடிச்சி உள்ள போடுங்க சார் இவிங்கள...